/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1501.jpg)
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக சமீபத்தில் வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த். ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர்.
சமீபத்தில் மாமனிதன் படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருதுகள் 22-ல் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான விருது கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. மாமனிதன் படத்தில் நடித்ததற்காக தாக்குர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். மேலும் விமர்சகர் விருது (ciritc choice), சிறந்த சாதனைக்கான விருது (outstanding achievement award) என்ற இரண்டு பிரிவுகளில் இயக்குநர் சீனு ராமசாமிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)